நாகை மாவட்டத்தில் தொடர் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையால் அச்சமடைந்த கிராம மக்கள் திரண்டுவந்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்தனர். திருடுபோன இடங் களை எஸ்.பி. ஆய்வு செய்து கொண்டிருந்தபோதே அதே பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளை அரங்கேறியிருப்பது, பொதுமக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

நாகை மாவட்டம் வேளாங் கண்ணி, பிரதமபுரம், பூவைத்தேடி, ராமர் மடம், செருதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், தொடர்ந்து திருட்டு, வழிப்பறி என பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு, நாகைமாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜவகரைச் சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி., நேரடியாக பிரதமபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று திருட்டு நடந்த இடங்களை ஆய்வுசெய்ததோடு, "இன்று முதல் கூடுதலாக தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். ஆர்வமுள்ள தன்னார்வலர்களும் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றலாம்'' என்று தெரிவித்தார். மாவட்ட எஸ்.பி. மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அதேநேரத்தில், அப்பகுதியில் ஒரு வீட்டை உடைத்து திருடிச் சென்றது காவல்துறையையே அதிர வைத்திருக்கிறது.

ff

Advertisment

போலீசார் இருக்கும்போதே திருடுறாங்களே என்கிற அச்சமும், ஆவேசமும் கொண்ட பொதுமக்கள், காவல்துறையைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மூன்று தனிப்படை அமைத்து, மோப்பநாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து துப்புத்துலக்கும் பணியை விரைவுபடுத்தியிருக்கிறார் எஸ்.பி.

குற்றம் நடக்கக் காரணம் என்னவென காவல்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். "நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான பிரச்சனைகளில் ஒன்று அருகில் இருக்கக்கூடிய காரைக்கால் சாராயம்தான். அதனால் ரவுடியிசமும் கொள்ளை, கொலைகளும் அரங்கேறுவது தொடர்கதையாகிடுச்சி. இதற்குமுன்பு இருந்த எஸ்.பி.க்கள் ஓரளவு கடத்தலையும், பிரச்சனையையும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது இருக்கும் எஸ்.பி. ஆபீசைவிட்டு வெளியே செல்வதே இல்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தைச் சுற்றிலும் கள்ளச்சாராயமும், கஞ்சா விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது, எஸ்.பி. அலுவலகம் அருகிலுள்ள பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள லாட்ஜ்களில் விபச்சாரம் நடக்கிறது. நாகையிலுள்ள 3 காவல் நிலையங்களில் இரண்டு காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள் இல்லை. இருக்கும் ஒருவரும் பெண் ஆய்வாளராக இருப்பதால் அவரது லிமிட்டை மட்டுமே கவனிக்கிறார்.

முன்பகை, விரோதம் காரணமாக வேளாங்கண்ணி பைனான்சியர் மனோகர், நாகை ரவுடி சிவபாண்டி என தொடர்ந்து பத்து கொலைகள் நடந்திருக்கின்றன. இதற்கு முன்பிருந்த எஸ்.பி.க்களான விஜயகுமார் செல்வநாகரத்தினம் போன்றோர் ரவுடியிசத் தையும் கள்ளச்சாராய நட மாட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தனர். விஜயகுமார் இருந்தபோது ஒரே ஆண் டில் 61 பேர் மீது குண்டர் சட்டம் போட்டு ரவுடிகளை கட்டுக்குள் வைத்திருந்தார். தற்போதுள்ள எஸ்.பி., ரவுடிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக் கைகளில் தாமதம் செய்வதால், கள்ளச் சாராயமும், கஞ்சாவும், கட்டப்பஞ்சாயத்தும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

Advertisment

ff

வேளாங்கண்ணி போலீஸ் சரகத்தில் அப்பானு என்கிற ரவுடிக்கும், கொலையான பைனான்சியர் மனோகர னின் அண்ணன் டி.வி.ஆர். ரமேஷ் குரூப்பிற்கும் மோட்டிவாகி, எப் போது வேண்டுமானாலும் கொலை நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாகை காவல் சரகத்தில் ரவுடி முனிஸ் தரப்பிற்கும், கொலையான ரவுடி சிவபாண்டி குரூப்புக்கும் மோட்டிவாகி கொலைநடக்கும் சூழல் உருவாகியுள்ளது. கீழ்வேளூர் காவல் சரகத்தில் சாராய வியாபாரிகளுக்குள் போட்டியால் சில கொலைகள் நடந்திருக்கின்றன. வேதாரண்யம், வேட்டைக்கார னிருப்பு காவல்நிலையப் பகுதிகளில் கஞ்சா கடத்தல், வாய்மேடு மற்றும் கீழையூர், தலைஞாயிறு காவல் சரகத்தில் மணல்கடத்தல், மூன்று சீட்டு லாட்டரி கொடிகட்டிப் பறக்கிறது, மொத்தத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக் கிறது. காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகளை இனம்கண்டு களையெடுப்பு நடத்தினாலே குற்றங் கள் முற்றிலும் குறைந்துவிடும்'' என்கிறார். நாகை மாவட்ட பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “"எஸ்.பி. இன்ஸ்பெக்டராக இருக்கும் ராணி ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்துறாங்க. ராணியோட தம்பி ஸ்பெஷல் டீம்ல இருக்காரு. ராணியின் ரத்த உறவைச் சேர்ந்த ஒருவர் காரைக்காலில் சாராயக்கடைகளை லீசுக்கு எடுத்து நடத்திவருகிறார். அந்த கடையிலதான் சரக்கு வாங்கணும்னு சாராய வியாபாரிகளுக்கு தன் சகாக்கள் மூலம் வாய்மொழி உத்தரவு போட்டிருக்காராம். ஸ்பெஷல் டீமும், எஸ்.பி. ஏட்டுகளும் இவங்களுக்கு வசூல்செய்து கொடுக்குறாங்க. வசூலைக் கவனிப்பதற்காகவே அடுத்த மாவட்டத்திலிருந்த உறவுக்கார பெண் ஆய்வாளர் ஒருவரைக் கொண்டுவந்து வசூல் வேட்டையை நடத்துகிறார்.

மூன்று ஐ.ஏ.எஸ்.ஸும் ஓரளவுக்கு ஆக்டிவா இருக்காங்க. ஆனா சட்ட ஒழுங்கு முழுமையாக கெட்டுப்போனதால் மூன்று பேரின் உழைப்பும் கேள்விக்குறியாகிடுச்சி. மூவரும் இந்த எஸ்,பியை மாற்றவேண்டும் என புகார் அனுப்பியிருக்காங்க''” என்கிறார்.

இதுகுறித்து எஸ்.பி. இன்ஸ்பெக்டர் ராணியிடம் விளக்கம்கேட்க அவரை தொடர்புகொண்டோம், போனை எடுத்தவர் யாரென கேட்டுவிட்டு போனை துண்டித்து விட்டார்.

மாவட்ட எஸ்.பி. ஜவகரோ, ’"மூன்று தனிப்படை அமைத்து, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம், விரைவில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்''’என்கிறார்.